Posts

Showing posts from June, 2023

திருட்டு 127 - மருத்துவமனை பெயர் குறிப்புத் தருக

Image
  உணர்வுகளின் உச்சங்கள்  உலவும் இடம்  இங்கே இந்த மூலையில்  அழுகை  அடிபட்ட கணவன்  அவசர சிகிச்சையில்  அழுகிறாள் மனைவி  அதோ அந்த மூலையில்  மகிழ்ச்சி  புதிதாய் ஒரு உயிர்  பிறந்த கையோடு  அப்பா அம்மா தாத்தா பாட்டி  என பல  உறவுகளைக் கொண்டு  வந்த  வரவில்  அலைகிறது  இதோ இந்த பக்கம்  வலி  அவசர சிகிச்சையில்  அந்த  கணவனின் வலி  அதோ அந்தப் பக்கம்  கவலை  வாலிபம் புற முதுகு காட்ட  வயோதிகம்  கூடவே கொண்டு வந்த  சக்கரை நோயை  நினைத்து  வருந்துகிறான்  வாலிப முதியோன்  இதோ இந்த இடுக்கில்  சிரிப்பு  மருத்துவமனை ஊழியர்கள் தங்களுக்குள்  பிடித்து விளையாடும்  நகைச்சுவையில்  அலைகிறது  இங்கே இந்த இடத்தில்  அலுப்பு  ஒரே வேலையை காலங்காலமாய்  செய்து  அலுத்துப் போய்  உர்ரென்று  அந்த மருத்துவ நிர்வாகியின்  முகத்தில்  அலைகிறது  இங்கே இங்கே  இந்தப் பக்கம்  நேராக பாருங்கள்  என்...