திருட்டு 136 - சரியா தவறா
பல மனிதர்களுக்கு வாழ்க்கைப் பரிட்சை நடத்தினாராம் கடவுள் வினாத்தாள்களைத் திருத்தும்படி என்னிடம் கேட்டார் அவருக்கு வேலைப்பளு அதிகம் போலும் திருத்திக் கொடுத்தேன் ஒரே பார்வையில் மதிப்பாய்வு செய்தார் பளீர் என அறைந்தார் என் கன்னத்தில் அய்யோ கடவுளே ! என அலறியபடி என்ன தவறு இழைத்தேன் என்று கேட்டேன் “கீழ்க்கண்ட வாக்கியம் சரியா தவறா அறிவு அழகு அறிவின்மை இழிவு “ மேற்கூறிய கேள்விக்கு சரி என பதிலளித்த அத்தனை அறிவாளிகளுக்கும் முழு மதிப்பெண் அளித்திருந்தேன் ஓர பார்வையால் கண் காட்டினார் பக்கத்தில் ஒரு குழந்தை மொழி அறிவின்றி இலக்கண அறிவின்றி எழுத்துக்களை இஷ்டத்திற்கு ஆட்டிப் படைத்துப் பேசிக்கொண்டிருந்தது அழகாய் !