Posts

Showing posts from 2024

திருட்டு 136 - சரியா தவறா

Image
பல மனிதர்களுக்கு  வாழ்க்கைப் பரிட்சை  நடத்தினாராம்  கடவுள்  வினாத்தாள்களைத் திருத்தும்படி  என்னிடம் கேட்டார்  அவருக்கு  வேலைப்பளு அதிகம் போலும்  திருத்திக் கொடுத்தேன்  ஒரே பார்வையில்   மதிப்பாய்வு செய்தார்  பளீர் என அறைந்தார்  என் கன்னத்தில்  அய்யோ கடவுளே !  என அலறியபடி  என்ன தவறு இழைத்தேன்  என்று கேட்டேன்  “கீழ்க்கண்ட வாக்கியம்  சரியா தவறா  அறிவு அழகு  அறிவின்மை இழிவு “ மேற்கூறிய  கேள்விக்கு  சரி என  பதிலளித்த அத்தனை அறிவாளிகளுக்கும்  முழு மதிப்பெண் அளித்திருந்தேன்  ஓர பார்வையால்  கண் காட்டினார்  பக்கத்தில் ஒரு குழந்தை  மொழி அறிவின்றி  இலக்கண அறிவின்றி  எழுத்துக்களை இஷ்டத்திற்கு  ஆட்டிப் படைத்துப்  பேசிக்கொண்டிருந்தது  அழகாய் !

திருட்டு 135 - நம்பிக்கைத் துரோகி

Image
    ‘அப்பா டாட்டா  கூப்டுட்டு போவாங்க’ என்று அதீத  ஆசையுடன்  கண்களில் முழு நம்பிக்கையுடன்  என்னைப் பார்க்கிறான்  என் குழந்தை  குற்ற உணர்வுடன்  தூக்கிச் செல்கிறேன்  தடுப்பூசிப் போடுவதற்கு !

திருட்டு 134 - ஆத்தூரில் மியாவ்

Image
  ஒரு குட்டிக் கதை  சொன்னேன்  இரு வயதை இன்னும் எட்டாத  என் குட்டிப் பயலுக்கு  ‘ஒரு ஊர்ல ஒரு மியாவ் இருந்துச்சாம்  அது மியாவ் மியாவ் என கத்திச்சாம்’ என ஆரம்பித்து .. சில நாட்கள் கழித்து … ஒரு குட்டிக் கதை  சொன்னேன்  எட்டு வயதை இன்னும் எட்டாத  என் குட்டிப் பெண்ணுக்கு  வழக்கம் போல்  இரவு தூக்கத்திற்குள்  அவளை  வழி அனுப்புவுதற்கு  பக்கதில்  ஒரு மெல்லிய குரல்  தேன் குழைத்து  இசை இணைத்து  சொன்னது  ‘ஆத்தூர்ல மியாவ் .. மியாவ் ..மியாவ்..’ தமிழ் குழைந்து  கதை  கவிதை ஆனது !

திருட்டு 133 - முனைவர்

Image
  தமிழ் அகராதியில்  சில திருத்தங்கள் : வேண்டும்   இனி    மேணும்  சித்தப்பா   இனி     சியப்பா  பார்க்க வேண்டும்   இனி      பாக்கும்  இருக்க வேண்டும்    இனி      ஈக்கா  சைக்கிள்     இனி       சைக்காட்டு  (சைக்கிள் தமிழ் வார்த்தை இல்லை என ஏக வசனம் வேண்டாம்) திருத்தியவர் , இன்னும்  திருத்திக்கொண்டிருப்பவர்  ஒன்றரை  வயதைத்  தத்தித் தத்தித்  தாண்டிய  என் குட்டி முனைவர் 

திருட்டு 132 - வரவேற்பு

Image
  இந்த  தங்கக் கம்பளம்  எதற்கு? என் கவிதை  நடந்து  உன் அருகில்  வந்து  உன்னை ரசிக்கவா ? இந்தத்  திருடனுக்கு  எதற்கு  இவ்வளவு வரவேற்பு?