Posts

Showing posts from September 20, 2026

திருட்டு 140 - தூக்கம் பற்றியும் கவிதை இழைத்த குற்றம் பற்றியும்

Image
  தன் குட்டி வலக்கையால்  தன் குட்டித் தலையை  பற்றி  இட குட்டிக் கையால்  வல குட்டிக் கையை  பற்றி  எதை பற்றியும்  கவலைப்படாமல்  தூக்கம்  பற்றிக் கொண்டு  படித்திருக்கும்  என் குழந்தையை  நான் பற்றிக் கொள்ள  என்னை  இந்த  கவிதை பற்றிக் கொண்டது ! நிமிடம்  கவிதையை புறக்கணித்து  நீளம் தாண்டி விளையாட  பள்ளி செல்ல  தாமதம் ஆனது  என் மூத்த மகளுக்கு ! மெதுவாய் புறப்படும்  கலையை அவள்  பற்றிக் கொள்ள  அவள் மேல்  கோபத்தை நான்  பற்றிக்கொள்ள  பள்ளி அடைந்தோம்  பத்து நிமிட தாமதத்தை  பற்றிக் கொண்டு . வரிசையில்  நிற்கிறாள் என் மகள்  ஆசிரியரின்  வசையைப்  பற்றிக் கொண்டு  இத்தனைக்கும்  காரணம்  இந்தக் கவிதையின் பிறப்பு  பற்றிக் கொள்கிறேன்  இந்த  இன்பத்துன்பத்தை !