Posts

Showing posts from September, 2026

திருட்டு 140 - தூக்கம் பற்றியும் கவிதை இழைத்த குற்றம் பற்றியும்

Image
  தன் குட்டி வலக்கையால்  தன் குட்டித் தலையை  பற்றி  இட குட்டிக் கையால்  வல குட்டிக் கையை  பற்றி  எதை பற்றியும்  கவலைப்படாமல்  தூக்கம்  பற்றிக் கொண்டு  படித்திருக்கும்  என் குழந்தையை  நான் பற்றிக் கொள்ள  என்னை  இந்த  கவிதை பற்றிக் கொண்டது ! நிமிடம்  கவிதையை புறக்கணித்து  நீளம் தாண்டி விளையாட  பள்ளி செல்ல  தாமதம் ஆனது  என் மூத்த மகளுக்கு ! மெதுவாய் புறப்படும்  கலையை அவள்  பற்றிக் கொள்ள  அவள் மேல்  கோபத்தை நான்  பற்றிக்கொள்ள  பள்ளி அடைந்தோம்  பத்து நிமிட தாமதத்தை  பற்றிக் கொண்டு . வரிசையில்  நிற்கிறாள் என் மகள்  ஆசிரியரின்  வசையைப்  பற்றிக் கொண்டு  இத்தனைக்கும்  காரணம்  இந்தக் கவிதையின் பிறப்பு  பற்றிக் கொள்கிறேன்  இந்த  இன்பத்துன்பத்தை !

திருட்டு 139 - இரட்டைப் பிள்ளைகள்

Image
  குழந்தை பேறு  பெறுவதற்கு  ஒரு ஆண் மகன்  எத்தனை வயதைத்   தொட வேண்டும் ? எதையும்  தொட வேண்டாம்  வயது வரம்பை  விட்டு விரட்டி  தான்   சிரிக்கும்போதெல்லாம்  பிரசவிக்கிறான்  என் குழந்தை  இரெட்டைப் பிள்ளைகளை !  அவர்கள் பெயர்கள்  பேரழகு  பேரின்பம் 

திருட்டு 138 - ஒரு முக்கிய அறிவிப்பு

Image
  சம்பந்தப்பட்ட  அனைவருக்கும்  ஒரு முக்கிய அறிவிப்பு  இன்னும் சிறிது காலத்திற்கு  என் கால்களில்  வார் செருப்பு   அணிய போவதில்லை  மூடிய செருப்புக்கு  மட்டுமே அனுமதி  தன் ஓவிய  திறமைகளை  திறன்படுத்த  என் மகன்  கால் விரல்களில்  நெயில் பாலிஷ்  அடித்துவிட்ட காரணத்தினால் 

திருட்டு 137 - இலக்கு

Image
இலக்குகளுக்கு இடையில்  நகரும் நகர  வாழ்க்கையில்  இடைவெளி வழி  வெளியேறி  என் குழந்தையைத்  தூக்கிக்கொண்டு  நடந்தேன்  அறைக்கு வெளியே  வீட்டிற்கு வெளியே  குடியிருப்புக்கு வெளியே  இலக்கில்லாமல்  'எங்க போறீங்க அப்பா'  என்று  வினவ  சும்மா எங்கேயோ என  பதிலளிக்க  ஓர் இலக்கை நிர்ணயித்தான்  லாலிபாப் கடைக்குப் போய்  ஒரு லாலி பாப் வாங்கித் தாங்க  இலக்கை அடைந்தான் ! இடைவெளி வழி  உள்ளே  நுழைந்தேன்  மறுபடியும்  நகர வாழ்க்கைக்குள்  என் இலக்குகளைத் தேடி