திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !
மரணம்
ஒரு ஊமைக் குசும்பன் !
சொல்லாமல் கொள்ளாமல்
உயிரை வெல்லாமல்
போகாதக்
கொடூரக் குசும்பன்!
கடவுளைக்
கண்டு பயமில்லை எனக்கு
நாத்திகம் சுவாசிப்பதால் !
மரணத்தைப் பார்த்தோ
தினம் அஞ்சுகிறேன் !
காற்றைச் சுவாசிப்பதால் !
எந்நேரமும் குசும்பன்
அதைப்பறிக்க முனைவான் என்பதால் !
என் வாழ்வின் கடன் நிமிடங்கள்
வெட்டியாக வெட்டியானுக்கு இரையாகும்
என்று அஞ்சுகிறேன் !
இந்தக் குட்டி வாழ்க்கையில்
வெட்டி நிமிடங்களை வெறுக்கிறேன்
கவிதையாய் அதைச் செதுக்க
முனைகிறேன்
மரணம்
ஒரு ஊமைக் குசும்பன் !
என்னையும் கவிதை
எழுத வைத்துவிட்டான் !

Comments
Post a Comment