திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !
தோல்விகளின் தோள்களில்
தலைசாய்த்துப் பழகிவிட்டது
மனச்சோர்வின் ஓரங்களில்
கிடந்துருண்டு அலுத்துவிட்டது
எதிர்பார்ப்புகளின் எதிரிகளை
எதிர்த்து நின்று களைத்துவிட்டது
மனஇறுக்கத்தின் நெரிசலில்
நசுங்கி நின்று வெறுத்துவிட்டது
வாழ்வின் வெறுமை வெல்ல
சாவில் நிறைவைத் தேடி
நடந்தான்
நம்பிக்கையின் குரல் கேட்டது
'இன்னொரு முறை வா
நட்சத்திரங்கள் சேகரிக்க'
என்றது
'தேடிய பொருள் கிடைக்காமல்
வாடியது போதும்
புது பொருள்கள் நீயே
படைப்பாய்'
என்றது
கண்ணீர்த் துளிகளில்
வெளிச்சத்தின் பிரதிபலிப்பு
தெரிந்தது
தோல்வியின் தோள்களை விலக்கி
நம்பிக்கையின் கைகளைப் பிடித்தான்
மனச்சோர்வின் இருளறையில்
ஜன்னலைத் திறந்தான்
எதிர்பார்ப்பின் எதிரிகளை
புன்முறுவலோடு நகைத்தான்
முன்னோக்கி நடந்தான்!
மனஇறுக்கத்தின் பிடிகளை
விலக்கி ,
நட்சத்திரங்கள்
சேகரிக்க !

Comments
Post a Comment