Posts

Showing posts with the label புதுக்கவிதை

திருட்டு 116 - கோடை காலச் சொந்தங்கள்

Image
கோடை காலம்  பகலில்  சூரியன் பெரியப்பா  அவரைக் கண்டுகொள்வதில்லை  என  ஓயாமல் தீ முறைக்க  மாதா  மாதம்  தவறாமல்  நலம் விசாரித்துவிட்டுச்  செல்கிறாள்  என் அத்தை மகள்  பௌர்ணமி  பாசக்காரி ! என் மேக மாமாவுக்கும்  அவளுக்கும்  ஒத்து வருவதில்லை  அவள் வரும்போது  இவர் வருவதில்லை  இவர் வரும்போது  அவள் வருவதில்லை  இருந்து விட்டுப் போகட்டும்  அடி  பௌர்ணமியே ! நம்  கூட்டுக்குடும்பம்  உடையாமல்  பார்த்துக்கொள்  அடுத்த  அமாவாசை  வரும்வரை !

திருட்டு 111 - தண்ணீர் முத்துக்கள்

Image
நேற்று இரவு காதல் வெறியில் தன்  மேக வீட்டை விட்டு பூமி நோக்கி ஓடி வந்தான் மழை முரடன் பச்சிலைகளை கர்ப்பிணி ஆக்கினான் பிறந்தன தண்ணீர் முத்துக்கள் !

திருட்டு 110 - அழகின் தந்திரம்

Image
அழகு தன் தற்காப்பிற்காய் கற்றுக்கொண்டதோ இந்த கைக்குழந்தை கராத்தே !

திருட்டு 109 - காற்றின் நோக்கம்

Image
காற்று வீசுகிறது துணி அசைகிறது கைக்குழந்தையின் சிரிப்பு

திருட்டு 108 - இளமை ஓ இளமை !

Image
அரும்பு மலராய் நம்பிக்கையுடன் ! புது வாழ்க்கை செதுக்க ஆசையுடன் ஆயிரம் கற்பனைகள் ஆயிரம் சாத்தியங்கள் கனவுகள் இன்னும் அடிமைகள் உணர்வுகள் இன்னும் தலைவர்கள் இளமை ஓ இளமை உன்னில் நடனமாடும் புதுமை அரும்பு மலராய் நீ அழகாய் காத்திருக்கிறாய் இழக்கும் முன் பறந்துவிடு விலகும் முன் ருசித்திவிடு இளமை ஓ இளமை சாகும் வரை என்னை அணைத்திடு !

திருட்டு 107 - பதில் சொல்ல முடியவில்லை

Image
எண்ணக்  கதவுகளை யாரோ தட்டிய சத்தம் எட்டிப் பார்த்தேன் இரு காதுகள் கேட்டன அழுகை சத்தம் எங்கே ? பொக்கை வாய் மொக்கை எங்கே ? பதில் சொல்ல முடியவில்லை கதவை மூடி தலை சாய்த்தேன் எண்ணக்  கதவுகளை யாரோ தட்டிய சத்தம் எட்டிப் பார்த்தேன் இரு கண்கள் கேட்டன கொக்கிப்  போட்டு இழுக்கும் பார்வை எங்கே ? அழகை உருட்டி வைத்து பார்த்துக்கொண்டிருந்தேனே , அந்தக் காட்சி எங்கே ? பதில் சொல்ல முடியவில்லை கதவை மூடி தலை சாய்த்தேன் எண்ணக்  கதவுகளை யாரோ தட்டிய சத்தம் எட்டிப் பார்த்தேன் இருகைகள் கேட்டன அணைத்து வைத்திருந்த அரும்பு மலர் எங்கே ? பிடித்து வைத்திருந்த பிஞ்சுச் சுடர் எங்கே ? பதில் சொல்ல முடியவில்லை கதவை மூடி தலை சாய்த்தேன் எண்ணக்  கதவுகளை யாரோ தட்டிய சத்தம் எட்டிப் பார்த்தேன் ஒரு மூக்குக் கேட்டது மயக்கும் மூத்திர வாடை எங்கே ? இழுக்கும் பால் மணம் எங்கே ? பதில் சொல்ல முடியவில்லை கதவை மூடி தலை சாய்த்தேன் எண்ணக்  கதவுகளை ...

திருட்டு 106 - கற்பனை கிள்ளி !

Image
எது வரைத்  தொடரும்  அறியேன் நான் ! வரும் வரை  வாழ்வை  ருசிப்பேன் நான் ! சுடும் வரை  நெருப்பை  அணைப்பேன் நான் ! அலையென        அலையென  தடை           தடுத்தாலும்  மலையென           மலையென  எழுவேன் நான் ! ஒரு நாள்  வருமே          முற்றுப்புள்ளி  அதுவரை   வரைவேன்         கற்பனை கிள்ளி !

திருட்டு 105 - மடி !

Image
அப்பா மடி  அம்மா மடி  யார் மடி  வேண்டுமடி  தோணும்படி  தூங்கும்படி  கூறுகிறேன் நீ கேட்கும்படி ! தூக்கமடி  தூக்கமடி  இரவு பகல் தொலைக்கும் தூக்கமடி  வேண்டுமடி  வேண்டுமடி  உன் தூக்கத்தில் ஒரு  பிடி ! முத்தமடி முத்தமடி நான் கேட்டதெல்லாம் முத்தமடி மூத்திரமடி மூத்திரமடி என்றோ உன் காதில் வந்து விழுந்துதடி என் ஆடையெல்லாம் மூத்திரமடி !

திருட்டு 104 - அரசி !

Image
கழுத்து நிற்கவில்லை  முதுகு நிமிரவில்லை  கால்கள் நடக்கவில்லை  வாயும் பேசவில்லை  இருந்தும்  ஆட்சி  மட்டும் உன் கையில் !

திருட்டு 103 - பழிக்குப் பழி !

Image
பட உரிமை : தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்  சரக்குக் கிடைக்காததால் ஜாதி மாறச் சொன்னான்  ! நான் உள்வாங்கினேன்!       - அண்ணா சாலை .

திருட்டு 102 - எல்லாரும் வாங்க !

Image
அம்மா வாங்க அப்பா வாங்க தாத்தா வாங்க பாட்டி வாங்க மாமா வாங்க அத்த வாங்க ஊரே வாங்க உலகே வாங்க மோடி வாங்க டிரம்ப் வாங்க ரஜினி வாங்க டாம் க்ரூஸ் வாங்க யானை வாங்க பூனை வாங்க எறும்பே வாங்க கரும்பே வாங்க நெருப்பு வாங்க தண்ணீர் வாங்க எல்லாரும் வாங்க ! நான் ஆய் போயிட்டேன் !

திருட்டு 101 - மஞ்சள் வெயிலே !

Image
நேற்றை போல் இன்றில்லை ! மயக்கும் மஞ்சள் வெயிலின் மௌனமும் மௌனத்திற்கு ஸ்ருதி சேர்க்கும் காக்கையின் சத்தமும் நேற்றைய நினைவுகளை திரையிடுகின்றன ! இன்றைய வாழ்க்கை நிச்சயம் நேற்றைய நிகழ்வுகளின் தொடர் அல்ல ! எத்தனை மாற்றங்கள் ! சில நேரங்களில் நேற்றைய நேரங்களை விரும்புகிறேன் ! யாரோ ஒருவர்  வாழ்க்கையின் நிகழ்வுகளாய் அவை நினைவுத் திரையில் தெரிகின்றன ! இந்த மஞ்சள் வெயிலின் இதம் நேற்று என் வாழ்விற்கு இதம் கொடுத்த நிகழ்வுகளைத் திரையிடுகின்றது ! மனம் இளகுகிறது! காக்கையின் கரைதலுக்கு வணங்குகிறது! எதையோ இழந்தது போல் ஒரு மெல்லிய சோக இழையும் தெரிகிறது அந்த  இதங்களுக்கு நடுவில் ! என்னுடைய இந்த வாழ்க்கையின் கதையில் நேற்றை போன்ற சுகமான தருணங்கள் இனி கிடையாதோ எனத் தோன்றுகிறது ! மஞ்சள் வெயிலே எதாவது பேசேன் ! தன்னந்தனியே உளறிக்கொண்டிருக்கிறேன் !

திருட்டு 100 - நிறைவேற்றம்

Image
ஒரு எண்ணம் சிறகு விரித்தது ! நூறு கவிதைகளாய் இன்று முதுமை அடைந்தது ! அந்த எண்ணத்திற்கு நன்றி ! ஒரு பார்வை என் குளத்தில் கல் எரிந்தது ! கல் தொட்டதும் குளத்தில் கவி அலைகள் திரண்டன ! வைரமுத்துவுக்கு நன்றி ! ஒரு உறவு என் கவிதைகளைப் பதம் பார்த்துத் தட்டிக் கொடுத்தது ! கவிதைகள் தன்னம்பிக்கைக் கொள்ளச் செய்தது ! என் துணைவிக்கு நன்றி ! ஒரு கலா தேவி என் பன்முக உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தாள் ! கவிதைகள் அள்ள அட்சய பாத்திரம் தந்தாள் ! கவிதா தேவிக்கு நன்றி ! ஒரு தாய் என் திருட்டுக்குக் கை கொடுத்தாள் ! தன் மடியில் என் திருட்டுப் பொருட்களை ஏந்தினாள் ! தமிழுக்கு நன்றி ! என் திருட்டில் அவளுக்குப் பங்களிப்பதாக வாக்களித்தேன் ! தமிழ்த் தாயே ! இந்த நூறாம் கவிதை உனக்கே ! நேற்று பெய்த மழையில் இன்று முளைத்தக் காளான் கவிஞன் இந்தக் கவித்திருடன்! என் திருட்டை ரசித்த மனங்களுக்கு நன்றி ! என் முதல் பயணம் நிறைவேறியது ! மீண்ட...

திருட்டு 99 - தம்பி !

Image
நினைக்கவில்லை கவிதை எழுதுவேன் என உனக்கு ! என் ஈகோ சட்டையைக் கழற்றிவிட்டு நம் உறவுச் செடிக்குத் தண்ணீராக இக்கவிதை ! அன்று ! ஆசை மிட்டாய் திருடினாய் என்று அம்மாவிடம் சாட்சி சொன்னேன் ! கவிதை எழுத நினைவுக் கிடங்கை தேடிப் பார்த்ததில் இதைக் கண்டேன் ! காட்டிக் கொடுத்த குற்ற உணர்ச்சி அந்த நினைவுக்கு காவல் செய்கிறது இன்னும் ! அப்பாவின் ஆணையில் பள்ளி செல்வோம் தினமும் குட்டை சைக்கிளில் நீ முன்னே ! பாதுகாவலாக நெட்டை சைக்கிளில் நான் பின்னே ! மாவட்டத்தில் முதல் மாணவனாக நீ தேர்வானபோது நானே வென்றது போல் உணர்ந்தேன் ! இரு வேறு துருவங்களாய் நீயும் நானும் இன்று ! இறுக்கமான நேரங்கள் சிலவும் உண்டு ! இருந்தாலும் செல்வோம் ! தோள்பிடித்து ! வாழ்க்கையின் முட்டுச்சந்து வரை ! வாழ்க்கை உனக்கு ஒளித்து வைத்திருக்கும் ரகசியங்கள் நானறியேன் ! எதுவென்றாலும் தளராதிருப்பாய் அதை மட்டும் அறிவேன் ! வருடங்கள் பல கண்டுவிட்டோம் ஒன்றாய்! அடங்காது அத்தனையும் ...

திருட்டு 98 - அப்பா !

Image
அன்று ! திண்ணையில் அமர்ந்து அம்மையும் நானும் தம்பியும் காத்திருப்போம் நிஜாம் பாக்கு பையில் வீட்டு ஜமான்களை வாங்கிக்கொண்டு சைக்கிளில் வரும் உங்களை எதிர்பார்த்து ! பேய்கள் உறங்கப் போனபின்பும் பெட்டிக் கடையில் சளைக்காமல் வேலைப் பார்த்து குட்டிக்  குட்டியாய் சேமித்து குட்டிக் குடும்பம் சமைத்தீர்கள் ! விடுப்பு எடுக்காமல் உழைத்து எங்களை வளர்த்தீர்கள் ! கல்வி ஒன்றே நடுத்தர வர்க்கம் ஏறுவதற்கான ஒரே ஏணி என்று எங்களைக் கட்டுக்கோப்பாய்க் காத்தீர்கள் ! ஒழுக்கத்தில் தேய்த்து எடுத்தீர்கள் ! கல்வி ஏணியில் ஏற்றிவிட்டிர்கள் ! ஏறிவிட்டோம் ! உங்கள் இளமையைக் குடும்பத்திற்காகத் தியாகம் செய்த நீங்களும் தியாகிதான் ! குடும்பத்தை இயக்கிய தலைவர்தான் ! ஒவ்வொரு இரவும் சாமம் கடந்து வீடு சேரும் நேரம் உங்கள் சைக்கிள் ஸ்டான்ட் சத்தம் என்னை எழுப்பிவிடும் தூங்காமல் தூங்குவேன் ! தம்பி நெற்றியிலும் என் நெற்றியிலும் புனித எண்ணெய் தேய்த்துவிட்டே தூங்குவீர்கள்  ! ச...

திருட்டு 97 - ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைவு

Image
புயல் கூட புறப்படும் ஒரு பட்டாம்பூச்சியின்  சிறகசைவில் ! வாழ்க்கையே திசை மாறும் பெண் பார்வையின் ஆழ்குழியில் ! பிரசவ வலியும் மறந்து போகும் தன் குழந்தையின் தரிசனத்தில் ! பேராட்சியும் கவிழ்ந்து போகும் ஒரு குடிமகனின் வாக்கினில் ! வரலாறும் முதுகொடியும் ஒரு சித்தாந்தத்தின் அறிமுகத்தில் ! பெருங்காடும் தீய்ந்து போகும் ஒரு தீப்பொறியின் பிறப்பினில் ! அட ! நான் கூட கவிஞன் ஆவேன் ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைவில் !

திருட்டு 96 - அப்பாவானேன் !

Image
காதல் மூன்றெழுத்தும் காமம் மூன்றெழுத்தும் இணைந்துத் தந்த மூன்றெழுத்து ரியானா ! அப்பா மூன்றெழுத்து அம்மா மூன்றெழுத்து தாத்தா மூன்றெழுத்து பாட்டி மூன்றெழுத்து என மூன்றெழுத்து பதவிகள் அணிவித்தவள் ரியானா ! வருடத்தின் மூன்றாம் மாதம் மாதத்தின் மூன்றாம் நாள் என மூன்றிலே பிறந்த மூன்றெழுத்து ரியானா ! மூன்றெழுத்து மருத்துவர் ஷோபனா எடுத்துக் கொடுத்த மூன்றெழுத்து முத்து ரியானா ! மூன்றை மூன்றால் பெருக்கி ஒன்பதாய் பார்த்தறிந்து ஒன்பதாம் மணியில் பிறந்தவள் ரியானா ! கருவறையில் இருந்து கொண்டே பிரசவம் பார்க்க செல்லும் போது மூன்றாம் எண்ணில் முடியும் வண்டியைத் தேர்ந்தெடுத்தவள் ரியானா ! மூன்றெழுத்து மகள் உறவைத் தன் பெற்றோருக்கு அளித்த மூன்றெழுத்து பாப்பா ரியானா ! கவிதை மூன்றெழுத்து ! என் கவிதையும் மூன்றெழுத்து ! இந்தக் கவிதையால் என் மூன்றெழுத்துக் கவிதையை உலகிற்கு அறிமுகம் செய்கிறேன் !

திருட்டு 95 - வாழ்க்கையோடு விளையாடு !

Image
கருவறை மர்மங்கள் உடையும் நாள் ! மூன்றாம் மாதம் மூன்றாம் நாள் மூன்றாம் நபர் என் இல்லத்தில் இணையும் நாள் ! வரும் முதல் நொடியிலேயே பலருக்குப் பதவிப்பிரமாணம் செய்யும் நாள் ! அப்பாவாக அம்மாவாக தாத்தாவாக பாட்டியாக சித்தப்பாவாக பெரியம்மாவாக அழுகை இசையின் பின்னணியோடு ஒரு வாழ்க்கை தொடங்கும் நாள் ! என் வித்தை சுமந்து செல்லும் பொறுப்பை ஏற்கும் நாள் ! எங்கள் உள்ளங்களில் மகிழ்ச்சியை ஏற்றும் நாள் ! இந்நாள் அந்நாள் உயிரே ! வரவேற்கிறோம் ! பாசக் கம்பளம் விரித்து மகிழ்ச்சித் திரவியம் தெளித்து அக்கறை ஆடை உடுத்தி உற்சாகக் கெட்டி மேளம் தட்டி வரவேற்கிறோம் ! இனி இந்த உலகம் உன் கையில் ! வா ! வாழ்க்கையோடு விளையாடு !

திருட்டு 94 - கவிதை ஒலி !

Image
ஒலி சிறகின்றி ஊனமாய் நின்றது . தன் தொண்டைக் குழியில் ஊற்றிக் குழைத்து மொழி சமைத்தான் மனித மிருகம் ! ஒலியைச் செதுக்கினான் ! மூளைகளின் தூதுவனாய் ஒலி பதவி ஏற்றது ! மொழி ஆடை உடுத்திக்கொண்டது ! ஒரு நாள் காலத்தைக் கடக்கும் ஆசை கொண்டது மொழி ! தொழில்நுட்பத்தின் தோள் சாய்ந்து எழுத்தாய் படுத்துக் கொண்டது ! காலத்தை வென்றது ! மொழியின் வாழ்வில் ஒரு வினோத பிரச்சினை .. மூளைக்கு மட்டும் தான் தூது செய்வாயா என இதயம் உணர்வுகளைக் கொட்டி விண்ணப்பம் செய்தது ! பிறந்தது கவிதை ! ஒலி இரட்டைப்  பதவியேற்பு ஏற்றுக்கொண்டது ! மொழிக்கு மேல் கவிதை மேலாடை உடுத்திக் கொண்டது ! ஒலியால் உருவான கவி தன் திறத்தால் தனக்கென செதுக்கிக் கொண்டது இன்னொரு ஒலி கவிதை ஒலி ! கேட்கிறதா அந்தக் கவிதை ஒலி ?

திருட்டு 93 - கதை கவிதை

Image
கதை கேளு! கதை கேளு! கதையோட கதை கேளு! கதையின்றி வாழ்வில்லை! கதையில்லா மனிதனில்லை! முடிந்தக் கதை வரலாறு நடக்கும் கதை வாழ்க்கை முடியா கதை ஏமாற்றம் புரியா கதை மர்மம் கதைச் செத்தால் மதம் சாகும் மதம் சொல்லும் கதை கேளு! கதைச் செத்தால் தேசம் சாகும் தேசம் சொல்லும் கதை கேளு! கதைக் செத்தால் உணர்வு சாகும் மனம் சொல்லும் கதை கேளு! அன்றாட வாழ்க்கை  வாழ செய்தி சொல்லும் கதை கேளு! அன்பான வாழ்க்கை  வாழ உறவு சொல்லும் கதை கேளு! இளமையான வாழ்க்கை வாழ குழந்தை சொல்லும் கதை கேளு! சோர்வுற்ற நெஞ்சமே உற்சாகக் கதை கேளு! பெருமை கொண்ட கர்வமே எளியோனின் கதை கேளு! அடிபட்ட உள்ளமே ஞானத்தின் கதை கேளு! கதை கேளு! கதை கேளு! கதையோட கதை கேளு! கதையின்றி இக்கவிதை இல்லை! அதையும் கேளு !