திருட்டு 113 - இது தான் சமாச்சாரமா ?
புரிகிறது
வெள்ளை நிறம்
ஏன்
நெஞ்சு நிமிர்த்தி
கர்வமாய்த்
திரிகிறது என்று!
உன் அழகின் அடையாளமாய்
அங்கீகாரம் அடைந்தது கண்டு
தெரிகிறது
மென்மை
ஏன்
தன்னிலை மறந்து
வானுக்கும் மண்ணுக்கும்
துள்ளுகிறது என்று !
உன்
அழகின் கணக்கில்
சேர்ந்து
கூட்டலோடும் பெருக்கலோடும்
உறவாட
வாய்ப்புக் கிடைத்ததைக் கண்டு
விளங்குகிறது
வேகமாய் நகரும்
வாழ்க்கை
ஏன்
வெட்கிக் குனிந்து
நிற்கிறது என்று !
மெதுவாய் மெத்தனமாய்
நீ நகர்ந்து
அதை நகைப்பதை உணர்ந்து
உணர்கிறது
உன் போல்
பறவை இனம்
எதற்காக
பூமியில் உலவுகிறது என்று !
இது போன்ற
கவிதை
கரு உரு கொண்டு
உன்னை ரசிக்க வேண்டும் என்று !
Comments
Post a Comment