திருட்டு 117 - இதயம் விழிப்பாளோ ?
மூளை
வருத்தப்படுகிறது
இதயம்
தூங்குகிறது
என்று
உயிர் கொடுத்தவள்
வாழ விழி கொடுத்தவள்
சோர்வாய்
தலை சாய்த்துத்
தூங்குகிறாள்
எழும்ப வலு இன்றி
பொறுப்புகளின் சுமையை
மூளையிடம்
கொடுத்துவிட்டு
தன்
பதவியை
ராஜினாமா செய்துவிட்டு
தூங்குகிறாள்
மூளை
நடத்தும்
வாழ்க்கை ஓட்டம்
தொடர்கிறது
நடை பிணமாய்
மனிதன் ரோபோவாக
ரோபோ மனிதனாக
இதயம் விழிப்பாளோ ?

Comments
Post a Comment