திருட்டு 2 - மேகத்திடம் திருடியது
வானில் ,
இயற்கை எழுதிய கவிதையோ நீ?
அது உண்மை என்றால்
என்னை மன்னித்து விடு!
கவிதைகளைத் திருடும்
கவித்திருடன் நான்
உன்னிடம் திருட வருகிறேன்!
வானில் கண்ட
கவிதையை
எழுத்தில் அடக்கிச்
சுருக்கிப் புனைகிறேன்
மழை தரும் உன்னைக்
கவி மழையில் நனைக்கிறேன்
ஓவியமாய்
நீ வானை அலங்கரிக்க
கவிதையாய்
நான் உன்னைச் சித்தரிக்கிறேன்
பஞ்சு முட்டாய் போல
நீ ஆசை காட்ட
கவிதையால்
பிடித்து உண்கிறேன்
ஒரு சந்தேகம்
கேட்கிறேன் உன்னிடம்
வெள்ளப் பெருக்கு
வரும்போது
நீ கொள்ளும் செருக்கு
கவிதையால்
உன்னைத் திருடுபவர்கள் மேல்
கொண்ட கோபமோ?
புகைப்படக் கலைஞர்களின்
கண்களுக்கு விருந்தே!
இக்கணமே
கவித்திருடன் என் திருட்டுக்கு மடங்கு!
Comments
Post a Comment