திருட்டு 39 - அருவி






நரைத்தக் கூந்தல்

என்றாலும்

உன் அழகு குறையவில்லை !


காலங்காலமாய்

ஓடினாலும்

உன் கால்கள் தளரவில்லை!


மலைக் கணவனை

மணந்தும்

பார்ப்பவரை

வசீகரிப்பதை நிறுத்தவில்லை !



ஆற்றுக்  குழந்தையை

பிரசவித்தும்

உன் இளமை குறையவில்லை !



இத்தனை  இருந்தும்

நதியாய்

கடலோடு கலக்கும்போது மட்டும்

 காணாமல் போய்விட்டாயே !




Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !