திருட்டு 46 - சிலேடைக் குறும்புகள்
பகலில்
கறுப்பாகும்
மூக்குக்கண்ணாடி
எதற்கு என்றேன்
நண்பனிடம்
'கண்ணுக்குக் குளிர்ச்சி'
என்றான்
தூரத்தில்
அழகு மங்கைகளைப்
பார்த்துக்கொண்டே !
----------------------------------------------------------------------------
வேலைக்குப் புறப்படும்
அவசர நேரம் ...
' தூக்கிக் கொண்டுப் போ'
வீட்டு வேலையில்
களைத்த மனைவி
சொன்னால்
கணவனிடம்
'தூக்கிக் கொண்டுப் போகிறேன்'
சொன்னான்
கணவன்
சாப்பாட்டுத் தூக்கியைத்
தூக்கிக் கொண்டு !
---------------------------------------------------------------------------------
சுவரில்
ஓடிய
பல்லியை
ஓட்டச் சொன்னான்
படுத்திருந்த
நண்பன்
'நீயெல்லாம் ஒரு பல்லியா!'
ஓட்டினான்
தோழன்
பல்லியைப்
பார்த்துக்கொண்டே !

Gud
ReplyDelete