திருட்டு 48 - கவித்திருடன் கைதானான்



கைதானேன் !

கவிதைகளைத்

 திருடிய

குற்றத்திற்காக ,


யாப்புக்குள்

               கவிதைகளை

                அடக்காததால்

காப்புக்குள்

               என் கைகளை

                இட்டு

இழுத்துச் சென்றனர்



நீதிமன்றத்தில்

நீதி விசாரணை

நீதிபதி குற்றத்தைப் பட்டியலிட்டார்


'கவிதைகளைத் திருடியது'

                                             முதல் குற்றம்

'கவிதைப்  பொதுச்  சொத்து'

என்றேன்


'உன் கவிதையில் இலக்கணம் இல்லை '

                                             இரண்டாம் குற்றம்

'என் கவிதைக்கு

                                       இலக்கு உண்டு
                                     
                                        கனம் உண்டு

                                      இலக்கணம் தேவையில்லை  '

என்றேன்


திருடிய பொருளைத்

திருப்பிக் கேட்டார்

'படித்தவர் மனதில்

                 பதிந்துவிட்டது

 முடியாது' என்றேன்

'கர்வம் உனக்கு'

                  என்றார்

'கவிஞனுக்கு  இயல்பு'

                   என்றேன்



'இழுத்துச் செல்லுங்கள்

 சிறையில் அடையுங்கள் இவனை '

தீர்ப்புக் கொதித்தது


கற்பனைச் சிறகைச்

                 சட்டன விரித்தேன் !

                                      பறந்தேன் !


என் திருட்டுப்

பயணம் தொடர்கிறது !

குற்ற எண்ணிக்கை

               குட்டிப் போடுகிறது !

Comments

Popular posts from this blog

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !