திருட்டு 54 - அன்றும் இன்றும்
சுற்றும்
பம்பரத்தை
இரு விரலால்
உள்ளங்கையில்
ஏற்றியது
இரு முறை
தண்டாவை
கில்லியால் தட்டி
தூரத்தில் அடித்து
இரு மடங்கு
புள்ளிகள் பெற்றது
கோலிக் குண்டு
ஆடும்போது
நண்பனின்
கோலி உடைத்தது
புட்டான் பூச்சியில்
நூல் கட்டி
பறக்கவிட்டது
"கொல கொலையா முந்திரிக்கா .."
"ஒரு குடம் தண்ணி எடுத்து .."
பாட்டுச் சத்தம் கேட்டது
திருடன் போலீஸ்
ராஜா ராணி
கல்லா மண்ணா
கண்ணாமூச்சி
கபடி ....
நினைவுக்கடலில்
மூழ்கினான் ....
குனிந்தத் தலை
நிமிராமல்
கைபேசியில்
விளையாடி கொண்டிருந்த
தன் மகனைப்
பார்த்துக்கொண்டே !

Comments
Post a Comment