திருட்டு 59 - புதுக்கவிதை



சுத்தத்

தமிழில்

ஒரு கவிதை எழுத

தமிழ்த்தாயிடம் சென்றேன்


அவள்

அடி என்றாள்

அசை என்றாள்

சீர் என்றாள்

தளை  என்றாள்

தொடை என்றாள்

பா என்றாள்

விருத்தம் என்றாள்

வாய்ப்பாடு என்றாள்


புறமுதுகு

காட்டி ஓடி வந்தேன்

தமிழ்க் காதலியிடம்!




புதுக்கவிதைப்

                   படித்தேன்

கட்டி அணைத்து 

          முத்தமிட்டாள் !

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !