திருட்டு 60 - நடுத்தர வர்க்கம்
பாரதப்
பெண்ணிடம்
அன்று
யாரவது
சொல்லியிருக்கலாம்!
செல்வச் செழிப்பு
பிறர் கண்ணுக்குத்
தெரியும்படி
அலங்காரம்
செய்யாதே என்று!
ஆங்கிலக் கள்வன்
வந்து
சூறையாடிச்
சென்று விட்டான்!
செல்வத்தை
இழந்த
விரக்தியில்
நேரு மாமா
அவளைக்
கண்டிப்போடு
வளர்த்தார்
மனதிற்குள்
புழுங்கிக்கொண்டே
ஏழையாய்
கழியும்
தன் வாழ்க்கை
என ஏங்கிக்
கொண்டிருந்தாள்
கொண்டிருந்தாள்
நல்ல வேளை
தாத்தா
நரசிம்ம ராவ்
அவளுக்கு
விடிவு காலம்
கொண்டு வந்தார்
செல்வ அறையின்
சாவியை
அவள் கையில்
கொடுத்தார்
அன்று
முதல்
பாரதப் பெண்
செல்வத்தைச்
சேர்க்க
ஆரம்பித்தாள்
கல்வி ஏணி
கொடுத்து
தன்
ஏழைக் குழந்தைகளை
நடுத்தர வர்க்கத்திற்கு
ஏற்றிக்
கொண்டிருக்கிறாள்
நானும்
அந்த
ஏணியில்
ஏறியவன்தான்..
நடுத்தர வர்க்கம்!

Comments
Post a Comment