திருட்டு 52 - ஜல்லிக்கட்டுக் கவிதைகள்
![]() |
வங்கக் கடலில்
பொறாமை அலைகள்
மெரினா கடற்கரையில்
ஒரு இளைய கடல்
உருவானதென்று !
....
சிக்கன் பிரியாணி
மட்டன் பிரியாணி
பன்றி பிரியாணி
தடை செய்தாயா நீ ?
பீட்டா !
காளையை அடக்க மட்டும்
ஏன் குரல் கொடுத்தாய் நீ ?
.....
[மண்ணைத் தாண்டிப் போவாயா ]
தமிழ் நாட்டுலே
எவ்வளவோ மாடுங்க இருந்தும்
நாங்க
ஏன்
உன்ன மட்டும்
வாங்குறோம்
ஜெர்சி ?
....
தமிழன்
உச்சந்தலையில்
அடித்துவிட்டதே
உச்ச நீதிமன்றம் !
....
மீசையை முறுக்கிக் கிட்டு
வேட்டிய மடிச்சுக் கிட்டு
காளையை அடக்கிக்கிட்டு
ஆடுவோம் ஜல்லிக்கட்டு !
| By Iamkarna' (Own work') [CC BY 3.0 (http://creativecommons.org/licenses/by/3.0)], via Wikimedia Commons |

Comments
Post a Comment