திருட்டு 68 - குழந்தைப் புராணம்
அங்கு ஏன்
கர்த்தர்
சிவன்
விஷ்ணு
புத்தர்
அல்லா
எல்லாரும்
வரிசையில் நிற்கிறார்கள்
தெரிகிறதா ?
குழந்தைத் தூங்குகிறது
தேவ தரிசனம்
செய்ய வந்திருக்கிறார்களாம்!
வரிசையில்
நிற்கும்
அத்தனைக்
கடவுள்களிடமும்
ஒரு
கேள்வி
கேட்க வேண்டும் !
நிலாவை
சுத்தம்
செய்து
கருவறையில்
வைக்கிறார்களாமே ?
குழந்தையே !
அதென்ன
சிரிப்பை
அடி வயிற்றில்
அரைத்துக்
குலுங்கிக் குலுங்கிச்
சிரிக்கிறாய் ?
வளர்ந்துக் கெட்டவர்களைப்
பார்த்து
நகைப்போ ?
தயவு செய்து
அப்படிப்
பார்க்காதே
என்
ஆன்மா
நிர்வாணமாகிக்
கூச்சப்படுகிறது!

Comments
Post a Comment