திருட்டு 69 - நெய்தல் புதுக்கவிதை
மீனின் கூற்று
கடலுக்குள்ளே சுத்திப்புட்டு - மீன்
வலைக்குள்ளே அகப்பட்டு
உயிரக் கொடுத்து மாஞ்சோம்- மனுஷ
வயிறு நிரப்பச் செத்தோம்
தலைவன் கூற்று
பேரம் பேசி வாங்கி வந்தேன் - நல்ல
காரம் போட்டுச் சமைக்கச் சொன்னேன்
பெஞ்சாதி வச்ச மீன் குழம்ப - என்
நெஞ்சார உண்டு அனுபவிச்சேன்
தலைவி கூற்று
ஆசை மச்சான் ஆக்கிக் கேட்டு
மீசை நனைக்க உண்ணும் போது
சந்தோசம் நெஞ்சில் பூத்துப் போச்சு
தந்தனத் தாம் தாளம் போட்டிடுச்சு !

Comments
Post a Comment