திருட்டு 72 - இந்தக் கவிதை எப்படி ?



கவிதையில்

                           என் கவலை மறந்தேன்

கவிதைக்குள்

                           என் அழுகை மறைத்தேன்

கவிதையோடு

                           என் பயணம் தொடர்ந்தேன்

கவிதையால்

                           என் வாழ்வை ரசித்தேன்

கவிதையின்

                           வன்மை உணர்ந்தேன்

கவிதைக்கு

                           என் வந்தனம் சொன்னேன்

கவிதைக்கே

                           என் கற்பனை கொடுத்தேன்

கவிதையுடன்

                          மூடம் நகைத்தேன்

கவிதைக்காக

                          இந்தக் கவிதை எழுதினேன்

கவிதையே

                           இந்தக் கவிதை எப்படி ?


Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !