திருட்டு 81 - ஆறாம் பொறி
மெய்
வாய்
கண்
மூக்கு
செவி
இந்த ஐம்பொறிகளுடன்
ஆறாம் பொறியாய்
இணைந்தவள் நீ !
ஓட முடியாமல்
களைத்துப் போன
ஒலி அதிர்வுகளை
இடம் விட்டு இடம்
ஊர் விட்டு ஊர்
நாடு விட்டு நாடு
கண்டம் விட்டு கண்டம்
சேர்த்தவள் நீ !
அரசர்களுக்குக் கூட
கிடைக்காத
சக்திகளை
இணையத்தின் இரக்கத்தால்
என் கைகளில்
தந்தவள் நீ !
என் கைகளுக்குள்
அடங்கி விடும்
மந்திரக் கோல் நீ !
பேராசை காதலி போல்
மனிதர்களின்
முகத்தைவிட
உன் முகத்தையே
அதிகம்
பார்க்கவைத்தவள் நீ !
அடியே !
என் சக்களத்தி !
உன் சேலைக்குள்
என்னை
மடக்கி வைத்தது போதும்
கொஞ்சம் வெளியே விடேண்டி !

Comments
Post a Comment