திருட்டு 84 - யார் சொல்வதைக் கேட்க?
காலப் புத்தகத்தில் முதல் பக்கம் :
யார் சொல்வதைக் கேட்க?
கற்கால மனிதன் நான் !
என் ஐம்பொறிகளின்
பேச்சைக் கேட்பேன்!
காலப் புத்தகத்தில் பல பக்கங்கள் கழித்து :
யார் சொல்வதைக் கேட்க?
பிறந்தவன் நான் !
கடவுள்
சொல்வதைக் கேட்பேன்!
காலப் புத்தகத்தில் இன்னும் பலப் பக்கங்கள் கழித்து :
யார் சொல்வதைக் கேட்க ?
அரசனின் ஆணைக்கு
அஞ்சுபவன் நான்!
அரசனின்
கட்டளையைக் கேட்பேன்!
காலப் புத்தகத்தில் இன்றையப் பக்கம் :
யார் சொல்வதைக் கேட்க ?
மக்களாட்சியின் மடியில்
பிறந்தவன் நான்!
என் உணர்வுகளின்
பேச்சைக் கேட்பேன்!
காலப் புத்தகத்தில் இன்னும் எழுதப்படாதப் பக்கம் :
யார் சொல்வதைக் கேட்க?
இணைய வளர்ச்சியின்
மகுடத்தில் உதித்தவன் நான் !
இணைய ரத்தத்தில்
ஓடும்
BIG DATA
உண்ணும்
ALGORITHMS
சொல்வதைக் கேட்பேன் !

Comments
Post a Comment