திருட்டு 91 - பயணக் களைப்பு



இயற்கை

சுதாகரித்துக் கொண்டது

கவிதைகளைப்  பத்திரமாகத்

தன் அக்குளுக்குள்

ஒளித்து வைத்திருக்கிறது

தேடித்  தேடிப்

பார்க்கிறேன்

கவிதை

கிடைத்தப்  பாடில்லை

மூளை முடுக்குகளில்

பார்த்துவிட்டேன்

மூலை முடுக்குகளிலும்

தேடிவிட்டேன்

கவிதா தேவி

கருணைப் புரிவதாய்த்

தெரியவில்லை

இத்தனை தூரம்

ஓடி வந்துவிட்டேன்

இன்னும்

பத்துக்  கவிதைகளில்

என் பயணம்

நிறைவுறும்

சற்றுத்  தடுமாற்றம்

தெரிகிறது

முதன் முறை

கணிணியின் திரையை

வெறித்துப்  பார்க்கிறேன்

வெறுத்துப் பார்க்கிறேன்

கவிதா தேவியே

ஏன் இந்த சோதனை ?

என்னுடன் ஓடி வந்த

பயணக் களைப்போ ?


Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !