திருட்டு 93 - கதை கவிதை




கதை கேளு!

கதை கேளு!

கதையோட கதை கேளு!

கதையின்றி வாழ்வில்லை!

கதையில்லா மனிதனில்லை!


முடிந்தக் கதை வரலாறு

நடக்கும் கதை வாழ்க்கை

முடியா கதை ஏமாற்றம்

புரியா கதை மர்மம்


கதைச் செத்தால் மதம் சாகும்

மதம் சொல்லும் கதை கேளு!

கதைச் செத்தால் தேசம் சாகும்

தேசம் சொல்லும் கதை கேளு!

கதைக் செத்தால் உணர்வு சாகும்

மனம் சொல்லும் கதை கேளு!


அன்றாட வாழ்க்கை  வாழ

செய்தி சொல்லும் கதை கேளு!

அன்பான வாழ்க்கை  வாழ

உறவு சொல்லும் கதை கேளு!

இளமையான வாழ்க்கை வாழ

குழந்தை சொல்லும் கதை கேளு!


சோர்வுற்ற நெஞ்சமே

உற்சாகக் கதை கேளு!

பெருமை கொண்ட கர்வமே

எளியோனின் கதை கேளு!

அடிபட்ட உள்ளமே

ஞானத்தின் கதை கேளு!


கதை கேளு!

கதை கேளு!

கதையோட கதை கேளு!

கதையின்றி

இக்கவிதை இல்லை!

அதையும் கேளு !

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !