திருட்டு 100 - நிறைவேற்றம்



ஒரு

எண்ணம்

சிறகு விரித்தது !

நூறு

கவிதைகளாய்

இன்று

முதுமை

அடைந்தது !

அந்த

எண்ணத்திற்கு நன்றி !


ஒரு

பார்வை

என்

குளத்தில்

கல்

எரிந்தது !

கல்

தொட்டதும்

குளத்தில்

கவி அலைகள்

திரண்டன !

வைரமுத்துவுக்கு

நன்றி !


ஒரு

உறவு

என்

கவிதைகளைப்

பதம் பார்த்துத்

தட்டிக்

கொடுத்தது !

கவிதைகள்

தன்னம்பிக்கைக்

கொள்ளச் செய்தது !

என்

துணைவிக்கு

நன்றி !



ஒரு

கலா தேவி

என்

பன்முக

உணர்வுகளுக்கு

உயிர்

கொடுத்தாள் !

கவிதைகள்

அள்ள

அட்சய பாத்திரம்

தந்தாள் !

கவிதா தேவிக்கு

நன்றி !


ஒரு

தாய்

என்

திருட்டுக்குக்

கை

கொடுத்தாள் !

தன்

மடியில்

என்

திருட்டுப்

பொருட்களை

ஏந்தினாள் !

தமிழுக்கு

நன்றி !

என்

திருட்டில்

அவளுக்குப்

பங்களிப்பதாக

வாக்களித்தேன் !

தமிழ்த் தாயே !

இந்த

நூறாம்

கவிதை

உனக்கே !


நேற்று

பெய்த

மழையில்

இன்று

முளைத்தக்

காளான் கவிஞன்

இந்தக்

கவித்திருடன்!

என்

திருட்டை

ரசித்த

மனங்களுக்கு

நன்றி !


என்

முதல்

பயணம்

நிறைவேறியது !

மீண்டும்

திருடும் வரை

திருட்டைக்

கைவிடுகிறேன் !

நன்றி !





Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !