திருட்டு 94 - கவிதை ஒலி !
ஒலி
சிறகின்றி
ஊனமாய் நின்றது .
தன்
தொண்டைக்
குழியில்
ஊற்றிக் குழைத்து
மொழி சமைத்தான்
மனித மிருகம் !
ஒலியைச்
செதுக்கினான் !
மூளைகளின்
தூதுவனாய்
ஒலி
பதவி ஏற்றது !
மொழி ஆடை
உடுத்திக்கொண்டது !
ஒரு நாள்
காலத்தைக்
கடக்கும்
ஆசை கொண்டது மொழி !
தொழில்நுட்பத்தின்
தோள் சாய்ந்து
எழுத்தாய்
படுத்துக் கொண்டது !
காலத்தை
வென்றது !
மொழியின்
வாழ்வில்
ஒரு வினோத
பிரச்சினை ..
மூளைக்கு மட்டும் தான்
தூது செய்வாயா
என
இதயம்
உணர்வுகளைக் கொட்டி
விண்ணப்பம் செய்தது !
பிறந்தது
கவிதை !
ஒலி
இரட்டைப் பதவியேற்பு
ஏற்றுக்கொண்டது !
மொழிக்கு மேல்
கவிதை மேலாடை
உடுத்திக் கொண்டது !
ஒலியால்
உருவான
கவி
தன் திறத்தால்
தனக்கென
செதுக்கிக் கொண்டது
இன்னொரு ஒலி
கவிதை ஒலி !
கேட்கிறதா
அந்தக்
கவிதை ஒலி ?

Comments
Post a Comment