திருட்டு 99 - தம்பி !
நினைக்கவில்லை
கவிதை எழுதுவேன்
என
உனக்கு !
என்
ஈகோ
சட்டையைக்
கழற்றிவிட்டு
நம்
உறவுச்
செடிக்குத்
தண்ணீராக
இக்கவிதை !
அன்று !
ஆசை மிட்டாய்
திருடினாய்
என்று
அம்மாவிடம்
சாட்சி சொன்னேன் !
கவிதை எழுத
நினைவுக் கிடங்கை
தேடிப் பார்த்ததில்
இதைக் கண்டேன் !
காட்டிக் கொடுத்த
குற்ற உணர்ச்சி
அந்த
நினைவுக்கு
காவல்
செய்கிறது
இன்னும் !
அப்பாவின்
ஆணையில்
பள்ளி செல்வோம்
தினமும்
குட்டை
சைக்கிளில்
நீ முன்னே !
பாதுகாவலாக
நெட்டை
சைக்கிளில்
நான்
பின்னே !
மாவட்டத்தில்
முதல்
மாணவனாக
நீ
தேர்வானபோது
நானே
வென்றது
போல்
உணர்ந்தேன் !
இரு வேறு
துருவங்களாய்
நீயும்
நானும்
இன்று !
இறுக்கமான
நேரங்கள்
சிலவும்
உண்டு !
இருந்தாலும்
செல்வோம் !
தோள்பிடித்து !
வாழ்க்கையின்
முட்டுச்சந்து
வரை !
வாழ்க்கை
உனக்கு
ரகசியங்கள்
நானறியேன் !
எதுவென்றாலும்
தளராதிருப்பாய்
அதை மட்டும்
அறிவேன் !
வருடங்கள்
பல
கண்டுவிட்டோம்
ஒன்றாய்!
அடங்காது
அத்தனையும்
ஒரு
கவிதைக்குள்
சொல்ல !
ஆனந்தமாய்
வாழ்க்கை
அமைய வாழ்த்துகிறேன் !
பெயருக்கேற்றாற்போல் !

Comments
Post a Comment