திருட்டு 137 - இலக்கு



இலக்குகளுக்கு இடையில் 

நகரும் நகர 

வாழ்க்கையில் 

இடைவெளி வழி 

வெளியேறி 

என் குழந்தையைத்  தூக்கிக்கொண்டு 

நடந்தேன் 

அறைக்கு வெளியே 

வீட்டிற்கு வெளியே 

குடியிருப்புக்கு வெளியே 

இலக்கில்லாமல் 

'எங்க போறீங்க அப்பா' 

என்று  வினவ 

சும்மா எங்கேயோ என 

பதிலளிக்க 

ஓர் இலக்கை நிர்ணயித்தான் 

லாலிபாப் கடைக்குப் போய் 

ஒரு லாலி பாப் வாங்கித் தாங்க 

இலக்கை அடைந்தான் !

இடைவெளி வழி 

உள்ளே 

நுழைந்தேன் 

மறுபடியும் 

நகர வாழ்க்கைக்குள் 

என் இலக்குகளைத் தேடி 



Comments

Popular posts from this blog

திருட்டு 139 - இரட்டைப் பிள்ளைகள்

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 96 - அப்பாவானேன் !