திருட்டு 138 - ஒரு முக்கிய அறிவிப்பு
சம்பந்தப்பட்ட
அனைவருக்கும்
ஒரு முக்கிய அறிவிப்பு
இன்னும் சிறிது காலத்திற்கு
என் கால்களில்
வார் செருப்பு
அணிய போவதில்லை
மூடிய செருப்புக்கு
மட்டுமே அனுமதி
தன் ஓவிய
திறமைகளை
திறன்படுத்த
என் மகன்
கால் விரல்களில்
நெயில் பாலிஷ்
அடித்துவிட்ட காரணத்தினால்

Comments
Post a Comment