திருட்டு 96 - அப்பாவானேன் !



காதல் மூன்றெழுத்தும்

காமம் மூன்றெழுத்தும்

இணைந்துத்

தந்த

மூன்றெழுத்து

ரியானா !


அப்பா மூன்றெழுத்து

அம்மா மூன்றெழுத்து

தாத்தா மூன்றெழுத்து

பாட்டி மூன்றெழுத்து

என

மூன்றெழுத்து

பதவிகள்

அணிவித்தவள்

ரியானா !


வருடத்தின்

மூன்றாம் மாதம்

மாதத்தின்

மூன்றாம் நாள்

என

மூன்றிலே

பிறந்த

மூன்றெழுத்து

ரியானா !


மூன்றெழுத்து

மருத்துவர்

ஷோபனா

எடுத்துக் கொடுத்த

மூன்றெழுத்து

முத்து

ரியானா !


மூன்றை மூன்றால்

பெருக்கி

ஒன்பதாய்

பார்த்தறிந்து

ஒன்பதாம்

மணியில்

பிறந்தவள்

ரியானா !


கருவறையில்

இருந்து

கொண்டே

பிரசவம் பார்க்க

செல்லும் போது

மூன்றாம் எண்ணில்

முடியும்

வண்டியைத்

தேர்ந்தெடுத்தவள்

ரியானா !



மூன்றெழுத்து

மகள்

உறவைத்

தன்

பெற்றோருக்கு

அளித்த

மூன்றெழுத்து

பாப்பா

ரியானா !



கவிதை

மூன்றெழுத்து !

என்

கவிதையும்

மூன்றெழுத்து !

இந்தக்

கவிதையால்

என்

மூன்றெழுத்துக்

கவிதையை

உலகிற்கு

அறிமுகம்

செய்கிறேன் !


Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !