திருட்டு 118 - காணவில்லை






ஒரு சில நாட்களாய்

சென்னையில்

வானத்தைக் காணவில்லை !

அடையாளம் :

பகலில் நீலச் சட்டை

அணிந்திருப்பான்

கூடவே சூரியனும்

சுற்றிக்கொண்டிருப்பான்

இரவில்

கருப்பு நிறச் சட்டை

அணித்திருப்பான்

நிலவோடு உலா

செல்வான்

கிடைத்தத் தகவல் :

பூமி பிடித்த புகையில்

மூச்சுத் திணறி ஓடியதாகச்

செய்தி !

தகவல்

தருவோருக்கு

ஆரோக்கியமான  வாழ்க்கை

சன்மானமாகத்

தரப்படும் !


Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !