திருட்டு 120 - மாறா





நேற்றும்

கழிந்த மாதமும்

கழிந்த வருடமும்

கழிந்த நூற்றாண்டும்

கழிந்த யுகங்களும்

இன்றும்

நாளையும்

இனி

பூமி உள்ள வரையும்

ஒரே

ஒலியை

ஒரே

மொழியை

பேசிக்  கொண்டிருக்கிறாய்

பேசிக் கொண்டிருப்பாய்

உடல் வருடும் மயில் இறகாய்

மனம் வருடும் இசையுடன்

மாற்றங்களின் சத்தத்தில்

நீ மட்டும் மாறாமல்

கடலே!

உனக்கு ஒரு பெயர் சூட்டுகிறேன்

மாறா !

பிடித்திருக்கிறதா ?

அதற்கும்

அதே அலை ஓசை பதில்தானா ?

மாறா !






Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !