திருட்டு 122 - சுதந்திரத் தாகம்
இறப்பின் விளிம்பில்
படுக்கையில் கிடந்தவள்
விழைந்தாள்
எழுந்து நிற்க
தூக்கி நிறுத்தின
நான்கு கைகள்
புற்று பற்றிய உடம்பை
நின்றாள்
படுத்தாள்
கண் மூடித் தூங்கினாள்
சுதந்திரத் துளிகள்
அருந்திய களிப்பில்
தூக்கத்திடம்
ஒப்பந்தம் செய்தது மரணம்
பட்ட துன்பம் போதும்
அழைத்துக் கொள்கிறேன் என்று
Comments
Post a Comment