குழந்தை பேறு பெறுவதற்கு ஒரு ஆண் மகன் எத்தனை வயதைத் தொட வேண்டும் ? எதையும் தொட வேண்டாம் வயது வரம்பை விட்டு விரட்டி தான் சிரிக்கும்போதெல்லாம் பிரசவிக்கிறான் என் குழந்தை இரெட்டைப் பிள்ளைகளை ! அவர்கள் பெயர்கள் பேரழகு பேரின்பம்
மரணம் ஒரு ஊமைக் குசும்பன் ! சொல்லாமல் கொள்ளாமல் உயிரை வெல்லாமல் போகாதக் கொடூரக் குசும்பன்! கடவுளைக் கண்டு பயமில்லை எனக்கு நாத்திகம் சுவாசிப்பதால் ! மரணத்தைப் பார்த்தோ தினம் அஞ்சுகிறேன் ! காற்றைச் சுவாசிப்பதால் ! எந்நேரமும் குசும்பன் அதைப்பறிக்க முனைவான் என்பதால் ! என் வாழ்வின் கடன் நிமிடங்கள் வெட்டியாக வெட்டியானுக்கு இரையாகும் என்று அஞ்சுகிறேன் ! இந்தக் குட்டி வாழ்க்கையில் வெட்டி நிமிடங்களை வெறுக்கிறேன் கவிதையாய் அதைச் செதுக்க முனைகிறேன் மரணம் ஒரு ஊமைக் குசும்பன் ! என்னையும் கவிதை எழுத வைத்துவிட்டான் !
காதல் மூன்றெழுத்தும் காமம் மூன்றெழுத்தும் இணைந்துத் தந்த மூன்றெழுத்து ரியானா ! அப்பா மூன்றெழுத்து அம்மா மூன்றெழுத்து தாத்தா மூன்றெழுத்து பாட்டி மூன்றெழுத்து என மூன்றெழுத்து பதவிகள் அணிவித்தவள் ரியானா ! வருடத்தின் மூன்றாம் மாதம் மாதத்தின் மூன்றாம் நாள் என மூன்றிலே பிறந்த மூன்றெழுத்து ரியானா ! மூன்றெழுத்து மருத்துவர் ஷோபனா எடுத்துக் கொடுத்த மூன்றெழுத்து முத்து ரியானா ! மூன்றை மூன்றால் பெருக்கி ஒன்பதாய் பார்த்தறிந்து ஒன்பதாம் மணியில் பிறந்தவள் ரியானா ! கருவறையில் இருந்து கொண்டே பிரசவம் பார்க்க செல்லும் போது மூன்றாம் எண்ணில் முடியும் வண்டியைத் தேர்ந்தெடுத்தவள் ரியானா ! மூன்றெழுத்து மகள் உறவைத் தன் பெற்றோருக்கு அளித்த மூன்றெழுத்து பாப்பா ரியானா ! கவிதை மூன்றெழுத்து ! என் கவிதையும் மூன்றெழுத்து ! இந்தக் கவிதையால் என் மூன்றெழுத்துக் கவிதையை உலகிற்கு அறிமுகம் செய்கிறேன் !
Comments
Post a Comment