திருட்டு 10 - வாழ்க்கைப் பாதை
என் வாழ்வின்
திசைமாறுதே
நான் நடக்கும்
பாதை மாறுதே
எனின் பயணம்
மட்டும் தொடருதே ...
மனக் கோட்டை
ஒன்றைக் கட்டினேன்
மனம் கொண்ட
ஆசைப் பற்றினேன்
அதைக் கோட்டை
எங்கும் கொட்டினேன்
நிஜம் நோக்கி
மீண்டும் திரும்பினேன்
மனக் கோட்டை
நிஜம் பார்க்க விரும்பினேன்
நெடும் பாதை ஒன்றைத்
திட்டம் தீட்டினேன்
மனக் கோட்டை நோக்கி
அதை வெட்டினேன்
அய்யோ !
புயல்
ஓன்று வீசிட
என் பாதை
திசை மாறிட
மனக் கோட்டை
எங்கோ நின்றிட
என் கனவு
கலைந்து போனதே
எனை நிஜம்
பார்த்து நகைத்ததே
என் வாழ்வின்
திசைமாறுதே
நான் நடக்கும்
பாதை மாறுதே
எனின் பயணம்
மட்டும் தொடருதே ...
Comments
Post a Comment