திருட்டு 21 - சூரியன் ஒரு சோம்பேறி




இரவில்,

கடல் போர்வைப்

                   போர்த்தி

அலைப் பெருமூச்சு

                    விட்டு

மல்லாக்காய்ப்

                     படுத்து

ஒரு

உல்லாசத் தூக்கம்!



பகலில்,

மேற்கை நோக்கி

உலகம் சுற்றும்

ஒரு

உல்லாசப் பயணம்!


மறுபடியும்,

கடல் போர்வைப்

                   போர்த்தி

அலைப் பெருமூச்சு

                    விட்டு

மல்லாக்காய்ப்

                     படுத்து

ஒரு

உல்லாசத் தூக்கம்!



சூரியன் ஒரு சோம்பேறி !

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !