திருட்டு 23 - அண்ணே! கொஞ்சம் பொருள் வேணும்
அண்ணே!
கொஞ்சம் பொருள் வேணும் ...
குழந்தையின் மகிழ்ச்சி
குழந்தையின் மனசு
இளைஞனின் உற்சாகம்
இளைஞனின் கனவு
கல்லூரி காதல்
கல்லூரி நட்பு
பண்டிகைச் சந்தோசம்
உங்கக் கடையில கிடைக்குமா ணே
எழுதி வெச்சுக்கோங்க
மொத்தம் எவ்வளவு ஆச்சுன்னு பாத்து சொல்லுங்க
தம்பி ...
எந்தப் பொருளும் புதுசா இல்ல
காலாவதி ஆகி நினைவுகளா இருக்கு
தரட்டுமா ?

Comments
Post a Comment