திருட்டு 26 - கவிதைப் போர்
அவள்
மனதைத்
தோற்கடிக்க
கவிதைப் போர்
ஒன்றைத் தொடுத்தேன்!
சொற்கள்
படைத் திரட்டி
அவள்
மனக்கோட்டை நெருங்கினேன்!
கவிதைக் குண்டு
நான் வீச
அவள்
கோட்டைச் சுவர்
உடைந்தது!
கவிதை அம்பு
நான் எய்த
அவள்
எண்ணச் சிப்பாய்கள்
மாண்டன!
கவிதை வாள்
நான் வீச
அவள்
கோபக் கணைகள்
தகர்ந்தன!
வெற்றி பெற்றச்
செருக்குடன்
அவள்
பார்வைத் தீண்ட
விரைந்தேன்!
முறைத்தாள்!
எவனுக்கும்
எதற்கும்
தான்
அடிமை இல்லை என்று!
போரில் வென்றேன்
அவளிடம் தோற்றேன்

Comments
Post a Comment