திருட்டு 28 - குட்டித் தூக்கம்
யார் சொன்னார்?
சொர்க்கம்
மண்ணில் இல்லையென்று
போடுங்கள்
ஒரு குட்டித் தூக்கம் !
எண்ணக்
குமுறல்கள்
பேச்சிழக்க
யோசனை வேண்டுமா?
போடுங்கள்
ஒரு குட்டித் தூக்கம் !
இதயத்தின்
கனத்தை
இறக்க
குறுக்கு வழிச்
சொல்லட்டுமா?
போடுங்கள்
ஒரு குட்டித் தூக்கம் !
மதியம்
உண்டுக் களித்த
பிரியாணியின் சுவையை
முழுவதும்
அனுபவிக்க வேண்டுமா?
போடுங்கள்
ஒரு குட்டித் தூக்கம் !
------------------------------------
சோம்பல் ஞாயிறு
சாப்பாட்டுக்குப் பின்
குட்டித் தூக்கம்
சுகம்
----------------------------------------

Comments
Post a Comment