திருட்டு 40 - இரட்டைக் கிளவி



சல சல  சலங்கை ஓசை

கல கல சிரிப்புச் சத்தம்

பட பட நெஞ்சம் துடிக்க

கட கட கதவைத் திறக்க

தள தள மங்கை ஒருத்தி

பள பள பற்கள் காட்ட

தக தக நடனம் ஆட

குளு குளு குளிரும் வாட்ட

திரு திரு கண்கள் முழிக்க

விறு விறு பேயும் நெருங்க


கனவு கலைந்தது

தமிழ் ஆசான்

நேற்றுச் சொன்ன

இரட்டைக்  கிளவியின்

விளைவுப் புரிந்தது !

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !