திருட்டு 49 - மாற்றத்தின் முதுகில்






அழகிய விடியலில்

               அனுதினம் திளைத்திட

புது புது கனவுகள்

               தினம் தினம் உருப்பெற



விருப்பம்  தான் !

ஆனால் ...


மறுபடி மறுபடி

மாற்றங்கள் முறைத்திட

தருமடி தருமடி

முதுகினில் வலித்திட



எழுந்தேன் !


அழகிய விடியலோ

             அசைத்திடும் புயலோ

புது புது கனவோ

               மனம் நெருடும் நிகழ்வோ


அதுவோ இதுவோ

நடுநிலை வகிப்பேன்

மாற்றத்தின் முதுகில்

என்

பயணம் தொடர்வேன் !

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !