திருட்டு 45 - இது மனிதக் காதல் அல்ல
நீலக்கடல்
உடை அணிந்திருந்தும்
அங்கங்கே
நில உடலைக் காட்டி
சூரியனை
வசீகரிக்கிறாள்!
பூமி
ஒரு கவர்ச்சிப் பெண் !
சூரியன்
மட்டும்
என்னச் சளைத்தவனா ?
தன்
வசீகரத்தால்
காலங்காலமாய்
பூமியை
வளைத்து இழுத்துக்
கொண்டிருக்கிறான் !
விடியற்காலையிலேயே
விழித்திடுவான்
பூமியைப் பார்க்க !
இவர்கள்
காதலில்
ஒரு சோகம் !
தன் காதலியை
அணைத்தால் ,
தீ முத்தம்
கொடுத்தால் ,
அவள்
இறப்பாள்
அறிவான்
சூரிய மன்மதன் !
எத்தனையோ கோள்கள்
அவனைச் சுற்றியும்
பூமிப் பெண்ணின் மீதே
அவனுக்குக் காதல் !
ஒளியால்
அவளைக் கர்ப்பிணி ஆக்கினான் !
மனித
குழந்தைகள் படைத்தான் !
மனிதக் காதல் அழியும்
மனிதம் அழியும்
இவர்கள் காதல் வாழும்
உலகம் முடியும்
இது மனிதக் காதல் அல்ல !
அது சரி ,
இதைக் கேட்டீர்களா ?
பூமிப் பெண்ணை
நிலா மகன்
சுற்றி வருகிறானாம் !
அடடே
இது ஒரு
முக்கோணக்
காதல் கதை !
இல்லை இல்லை
ஒரு
முக்கோணக்
காதல் கவிதை !

Comments
Post a Comment