திருட்டு 53 - பொறுப்பில்லாத சூரியன்



மேகங்களுக்கிடையே

ஏதோ

குடும்பத் தகராறாம்!


முட்டி  மோதிக் கொள்கின்றன



இடிச்  சத்தம் காதைப்

பிளக்கிறது!


வன்முறை தாளாமல்

வானமகள்

மழைக் கண்ணீர்

வடிக்கிறாள்!


ஏன் இந்த வன்முறை

என்று கேட்டால்

மின்னல் வாளைக் காட்டி

மிரட்டுகிறார்கள்!


எங்கே போனான்

இந்த

பொறுப்பில்லாத

சூரியன் ?

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !