திருட்டு 58 - அசைவுகள்
கீழ்க்கண்ட
அசைவுகளில்
கவிதை
ஒளிந்திருப்பதாகத்
தகவல்:
தாயின் கருப்பையில் சேயின் அசைவு
தென்றல் முட்டியதில் பூவின் அசைவு
காதலி கண்களின் கருவிழி அசைவு
கட்டழகுப் பெண்ணின் கட்டுடல் அசைவு
நிலவின் கட்டளையில் கடலலை அசைவு
குட்டிக் குழந்தையின் பிஞ்சு விரல் அசைவு
அசையாமல் அசையும் இசையின் அசைவு
அத்தனை
அசைவுகளுக்கும்
ஒரு
எச்சரிக்கை !
அசையாமல்
இருங்கள்
உங்களைத்
திருட வருகிறேன்!

Comments
Post a Comment