திருட்டு 63 - நாளைய விவசாயி
அரசியல்வியாதியில்
தூங்கும்
அரசியல்வாதிகளே !
தேவை இல்லை
எனக்கு,
இனி உங்கள்
உதவி!
மழையில்லாமல்
இனி நான்
தற்கொலை
செய்யேன் !
நிலமில்லாமல்
இனி நான்
விரக்தி
அடையேன் !
என் கூட்டாளி
தொழில் நுட்பம்
இருக்கிறான்
உதவி செய்ய!
என் ஆலோசகன்
விஞ்ஞானம்
இருக்கிறான்
அறிவுரை
வழங்க!
துல்லிய
பண்ணை விவசாயம்
பல்லடுக்கு விவசாயம்
மண்ணில்லா விவசாயம்
என
விவசாயத்தின்
புதுமுகங்களை
முத்தமிடுவேன் !
நவீனத்தோடு
கைகோர்த்து
என்
வயிற்றையும்
என் தாய்நாட்டின்
வயிற்றையும்
நிரப்புவேன் !
தொழில்நுட்பமே
இனி என்
தலைவன் !
சரி !
போனால் போகட்டும்
நிரப்பித்
தொலைகிறேன்!
உங்கள்
வயிற்றையும்!
https://en.wikipedia.org/wiki/Hydroponics
https://en.wikipedia.org/wiki/Vertical_farming
https://en.wikipedia.org/wiki/Precision_agriculture

Comments
Post a Comment