திருட்டு 66 - நாய்கள் ஜாக்கிரதை
தன்
அளவில்லா
விசுவாசம்
முன்வைத்துத்
தனக்குச்
சிலை வைக்கக்
கோரலாம்!
முதலைத் தூக்கம்
சுருண்டத் தூக்கம்
விரிந்தத் தூக்கம்
என,
தன்
மூன்றுத் தூக்கங்களுக்கும்
காப்புரிமை
பெறலாம்!
நாய் யோகா
பயிற்சி நிலையம்
ஆரம்பித்து
மனிதனுக்குப்
படிப்பிக்கலாம் !
'பீட்டா' வை
ஆதரித்து
மெரினா கடற்கரையில்
போராட்டம்
நடத்தலாம் !
தெரு நாய்களைக்
கொல்வதைத்
தடை செய்ய
அவசரச் சட்டம்
கோரலாம் !
குரைக்கிற நாய்
கடிக்காது
என்னும்
பழமொழியை
பொய்மொழி
ஆக்கலாம் !
நாய்கள் ஜாக்கிரதை !





Comments
Post a Comment