திருட்டு 75 - மௌனம் பேசுகிறது
முன் பின் தெரியாதவர்களின்
முன் பின்
இடைவெளிகளில்
நின்றுகொண்டு
உடல் இல்லை
உயிர் இல்லை
ஆனால்
குரல் மட்டும் கொண்டு
வழிநடத்தும்
அவள் இனிய குரல்
கேட்டுக்கொண்டு
மந்திரம் போடாமல்
மூடித் திறக்கும்
கதவுகளைப்
பார்த்துக்கொண்டு
மாறாமல் ஓயாமல்
அலுவலக வாழ்க்கையைப்
பிரதிபலிக்கும்
'லிப்ட் ' இல்
இன்று
தனியாய்ப் பயணிக்கிறேன்
மௌனம் ஏதோ சொல்கிறது
கேட்கவில்லை!

Comments
Post a Comment