திருட்டு 76 - முந்திரிக் கொட்டைக் கவிதை
தூங்கிக்கொண்டிருக்கும்
இந்தக்
கவிதையை
ரசிக்க
முட்டி மோதி
என்னைத் திட்டிக் கொண்டிருக்கின்றன
பல கவிதைகள்
முதலிடத்திற்காக !
யாருக்கும்
இடம் கொடுப்பதாய் இல்லை
கவிதை எழுதி
என் கவனம் சிதற
அனுமதிப்பாய் இல்லை
நான்
மட்டும் ரசிக்கிறேன்
இந்தக் கவிதையை !
அய்யோ !
ஒரு
கவிதை
நுழைந்துவிட்டதே !
முந்திரிக் கொட்டைக் கவிதை !

Comments
Post a Comment