திருட்டு 78 - நான்
நான் நினைக்கும் 'நான்'
நான் விரும்பும் 'நான்'
என் மனைவி அறிந்த 'நான்'
என் பெற்றோர் அறிந்த 'நான்'
என் தம்பி அறிந்த 'நான்'
என் நண்பர்கள் அறிந்த 'நான்'
என் சுற்றம் அறிந்த 'நான்'
என் அலுவலகம் அறிந்த 'நான்'
என் இணைய நண்பர்கள் அறிந்த 'நான்'
அத்தனை 'நான்' களும் முழுமையானதல்ல
உண்மையில்
யார் தான் 'நான்'
யாராவாகவும் இருந்துவிட்டுப் போகிறேன்
இப்பொழுது
கவித்திருடன் நான்

Comments
Post a Comment